July 21, 2015

சந்திரிக்கா ஐ.தே.முன்னணிக்காக கம்பஹாவில் பிரச்சாரம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சிவில் அமைப்புக்களுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக  அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தியதாக அவர் தனது பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளார். வெளிநாடு சென்றுள்ள இவர் இன்னும் ஓரிரு தினங்களில் நாடு திரும்பவுள்ளதாகவும் அவரது நெருங்கிய தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.  

No comments:

Post a Comment