ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
வசீம் கொலை தொடர்பிலான வழக்கு இன்றும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த கொலை தொடர்பில் முக்கிய அரசியல்வாதியொருவரின் புதல்வன் குறித்து பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், இது தொடர்பில் முக்கிய தகவல்கள் பலவற்றைனயும் தேடிப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இக்கொலைக்கு காதல் தொடர்பு ஒன்று காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment