July 01, 2015

முல்லை தீவு மாவட்ட செயலக்தில் இன்று காலை இடம்பெற்ற மீள் குடியேற்றம் தொடர்பான கலத்துரையாடல்

முல்லை தீவு மாவட்ட செயலக்தில் இன்று காலை இடம்பெற்ற மீள் குடியேற்றம் தொடர்பான கலத்துரையாடல்  மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது  இதன் போது பலதரப்பினரினால்  பல குற்றச்சாட்டுக்கள்  அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.

புதிய அரசங்கம் ஆட்சிக்கு வந்து  ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை முல்லை தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள கேப்பாப்புலம் புதுக்குடியிருப்பு  கொக்குளாய் போன்ற கிராமங்களின் இராணுவமுகாம்களை அகற்றி தமிழ்மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னிமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்  வினோதலிங்கம் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பல அரச அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இராணுவத்தினார் கலந்துகொண்டனார்











No comments:

Post a Comment