July 09, 2015

திருகோணமலையில் தோண்டத்தோண்ட எலும்புக்கூடுகள்



தமிழீழத்தின்  கிழக்கே திருகோணமலை நகரத்தில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நடக்கும் அகழ்வுப்பணிகளில் தொடர்ந்து மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன.
இன்று வியாழக்கிழமை மேலும் 6 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
திருகோணமலை நகரிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் இடம் பெற்று வரும் அகழ்வுப்பணிகளின் போது இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி மக்கெய்ஸர் விளையாட்டு மைதானம் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த பகுதியில் சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

No comments:

Post a Comment