July 09, 2015

மஹிந்த குருநாகலில் குதிப்பது உறுதி


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குருநாகலை தெரிவு செய்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவென வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். 

நாளைய தினம் குருநாகல் மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment