July 21, 2015

வெளிநாடுகளில் புலிகள் வலுவாக இயங்குகிறார்கள் - மஹிந்த தெரிவிப்பு

கடந்த ஆட்சியில் பல மில்லியன் டொலர்களை தான் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டவை அனைத்தும் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் புலிகளை தோற்கடித்தாலும் வெளிநாடுகளில் இதுவரையில் தோல்வியடைய செய்யவில்லை.

ஆனால் இராணுவ முகாம்களை அகற்றிவிடுவோம் இராணுவத்தினரை குறைத்து விடுவோம் என ஆட்சியில் உள்ளவர்கள் கூறுகின்றார்கள். இது தான் இன்றைய உண்மை நிலை என முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment