July 15, 2015

இறுதிப்போரில் கருணா குழு ஒப்புக்கொண்ட கருணா

தனது காட்டிகொடுப்புக்கு நல்ல பாடம் தந்துவிட்டார்கள் என்று தமிழ்மக்களுக்கு எதிராக காட்டிகொடுத்த கருனா தற்போது கதறுகிறார்.
இறுதிப்போரில் கருணா குழு சார்பாக 600 பேரை இறுதி யுத்தத்திற்கு அனுப்பியதாகவும் அதில் 300 பேரை இழந்ததாகவும் தற்போது ஆதங்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

(இவர்கள்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இறுதி யுத்ததில் தமிழ்மக்களை புலிகளிடமிருந்து பிரிக்க சில நடவடிக்கைகளை செய்தனர் அதாவது தமிழ் மக்களை மனித கேடயங்களாக பாவித்து அவர்களை சுட்டு கொள்வதற்காக இவர்கள் பாவிக்கப்பட்டுள்ளார்கள். பின்னர் அதை புலிகள் செய்ததாக பரப்புரையை ஶ்ரீலஙகா அரசு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.)

கருனா என்னும் முரளிதரன் மேலும் தெரிவிக்கையில் 

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார்,

தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது. 

போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, கோத்தாபய ராஜபக்சவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவும், வந்து அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என்று உனது உதவியைக் கோரினர். 

அந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன் காரணமாக, தமிழர்களின் சில பகுதியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

அந்த நேரத்தில் 600 தமிழ்ப் போராளிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக கருணா கிழக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களின் 300 பேர் போரில் இறந்து போனதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. 

தற்போது அதற்கான பொறுப்புகளைத் தானே சுமக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, தற்போதைய அரசியல் சூழல் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதை முதலில் கூற வேண்டியுள்ளதாகவும், இந்தச் சூழலில், இதுபற்றி நான் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment