July 11, 2015

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!



முல்லைத்தீவு, விசுவமடு குளத்தில் நீராடச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரண்டு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்திருந்ததாக தர்மபுரம் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த அனர்த்தம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதான இரண்டு மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment