சிரியாவுக்கு எதிராக யுத்தம் செய்து கொண்டிருக்கும்போது விமானத் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் கலகெதரவை சேர்ந்த அபு சுரைய் செய்லான் (37) என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவரின் குடும்ப உறுப்பினர்களை உடன் கைது செய்து விசாரணை நடாத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனையடுத்து, விசேட பொலிஸ் குழுவொன்று இவர் குடியிருப்பதாக கூறப்படும் கலகெதர பிரதேசத்தில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்தனர்.
பல வருடங்களுக்கு முன்னர் குறித்த நபரின் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளதாக இவ்விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கலேவெல பிரதேசத்தில் சர்வதேச பாடசாலையொன்றில் அதிபராக கடமையாற்றியுள்ளார். பின்னர் விடுமுறை பெற்று பாகிஸ்தான் சென்றுள்ளார்.
தற்பொழுது இவருடன் தொடர்புபட்டவர்கள் சகலரும் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் இன்றைய தேசிய சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment