July 19, 2015

உருத்திரபுரம் பகுதியில் சிறுமியின் சடலம் மீட்பு

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் இன்று சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் இச்சிறுமியே கடந்த மாதம் காணமல் போன சிறுமி என ஶ்ரீலங்கா காவற்துறை தெரிவித்துள்ளது. காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .

கிளிநொச்சி, உருத்திரபுரம், எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த 03 வயதான உதயகுமார் யர்சிகா கடந்த மாதம் 21/06/2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வீட்டிற்கு 2 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சக்திபுரம் குளத்திற்கு தனது ஒன்றுவிட்ட சகோதரனால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
குழந்தையை குளத்திற்கு அருகில் விட்டு, 14 வயதான சகோதரன் குளிக்கச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில், குழந்தை காணாமற்போயிருந்தது

No comments:

Post a Comment