June 17, 2015

ரணிலுக்கு எதிரான பிரேரணையை விவாதத்திற்கு எடுக்கும் திகதி அடுத்தவாரம் அறிவிக்கப்படும்-நிமல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர்  சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் கூடவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இதுதொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் மாத முதல்வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

இந்த நிலையில் அடுத்த மாத இறுதிக்குள் பிரதமருக்கு எதிரான பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்திவருவதாக எதிர்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment