யாழ்ப்பாணம், மட்டுவில் இல்வாரைக் குளம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கல்வயலைச் சேர்ந்த சதாசிவம் சபாரட்ணம் (வயது 58) என்பவரே சடலமாக மீட்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இல்வாரைக் குளத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காணியில் எரிந்த நிலையில் இச்சடலம் காணப்பட்டுள்ளது.
இன்று காலை இந்தச் சடலத்தை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment