May 24, 2015

யாழ்.உடுத்துறையில் பதற்றம்! பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல்

யாழ்.உடுத்துறையில் பதற்றம்! பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல்

வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப் பகுதியில் பொலிஸார் மீது பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 
குற்றச் செயல்களைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 
இந்த நிலையில் பொதுமக்களது தாக்குதலைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உடுத்துறை, ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலன் சிவபாதசுந்தரம் (வயது-56 ) என்பவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். 
காயமடைந்தவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment