தற்போது சர்ச்சைக்குரிய விவகாரமாகிப் போயிருக்கும், எதிர்கட்சித் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் யார் என்பது தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எதிர்வரும் 07ஆம் பாராளுமன்றில் விளக்கமளிப்பார் என ஶ்ரீல.சு.க.தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதனை சபாநாயகர் அறிவிப்பார் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா அறிவித்துள்ளார்.
