கார்த்தி நாயகனாக நடித்த பிரியாணி படத்தில் நடித்த நடிகை ஹானி புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் பிரியாணி. இப்படத்தில் வரும் கார் ஷோரூம் திறப்பு விழா காட்சியில் கார்த்தி ஒரு பெண்ணை சந்திப்பார். முதல் பார்வையிலேயே அப்பெண்ணை தனது காதல் வழியில் விழ வைத்து, அவரது மொபைல் எண்ணையும் பெறுவார்.
அந்தக் காட்சியில் நடித்திருந்தவர் தான் நடிகை ஹானி. இவர் அஜீத்தின் ‘ஆரம்பம்' படத்திலும் சிறு கேரக்டரில் வந்துள்ளார். தமிழ்ப் படங்கள் தவிர நிறைய மலேசிய படங்களிலும் ஹானி நடித்துள்ளார். இந்நிலையில் புற்றுநோய் தாக்கத்திற்கு ஆளான ஹானி, கடந்த சில மாதங்களாக அதற்கு தீவிர சிகிச்சையும் பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஹானி மரணமடைந்தார். ஹானியின் மறைவுக்கு டைரக்டர் வெங்கட்பிரபு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment