March 03, 2015

கோஹ்லியின் சாதனையை முறியடித்தார் ஆம்லா!

தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா அயர்லாந்துக்கு எதிராக இன்று அடித்த செஞ்சுரி மூலம் குறைந்த போட்டியில் 20 சதங்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுகிறார். 

முன்னதாக, விராட் கோஹ்லியிடம் இந்த சாதனை இருந்து வந்தது. உலக கோப்பையில் இன்று, தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப் பரிட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா சிறப்பாக ஆடி, 100 பந்துகளில் செஞ்சுரி அடித்தார்.