அம்பலாங்கொடை மீட்டியாகொடவில் கறுவா வியாபாரத்தை மேற்கொள்ளும் வர்த்தகரும் அவரது மனைவியும் அடையாளம் தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியாகினர்.
முச்சக்கரவண்டியில் வந்த சிலர் இன்று மாலை இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக மீட்டியாகொட காவல்துறையினர் தெரிவித்தனர். வர்த்தகருக்கு சொந்தமான கறுவா எண்ணெய் தொழிற்சாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மரணமானவர்கள் மீட்டியாகொட - தொடம்விலவைச் சேர்ந்த 42 வயதான சுனில் சாந்த மற்றும் 40 பிரியங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
