முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை நிராகரிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.
மஹிந்த ராஜபக்ஷ, முப்படையின் முன்னாள் தளபதிகள் என எழுவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த இவ்வழக்கை முன்னெடுக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
2015 ஜனவரி 09ஆம் திகதி அரசாங்கத்தைக் கைப்பற்ற சதி செய்தார் என்கிற குற்றாச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று (31) உச்ச நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவ இது தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு உச்ச நீதிமன்றில் இன்று ஆஜராகுமாறு உத்தரவிட்டு கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி அழைப்பாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.