March 03, 2015

ரங்கண ஹேரத்துக்கு பதிலாக பிரசன்ன!

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கையணி விளையாடிய போட்டியில் காயமடைந்த ரங்கன ஹேரத்துக்கு பதிலாக சீக்குகே பிரசன்ன அணியில் இணைக்கப்படவுள்ளார் என இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேரத் கடைசியாக இடம்பெற்ற போட்டியில் பங்கேற்ற  ​போது அவரது கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் காயம் குணமடைய கிட்டத்தட்ட 7 -10 நாட்கள் எடுக்குமெனவும் தெரிவித்துள்ளது. 

எனவே அவருக்கு பதிலாக போட்டிகளில் பங்கேற்கும் பொருட்டு சீக்குகே பிரசன்ன அவுஸ்ரேலியாவுக்கு பயணமாகவுள்ளார் என கிரிக்கட் சபை மேலும் தெரிவித்துள்ளது.