டெல்லியில் 2015–ம் ஆண்டுக்கான இந்திய அழகியாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2015–ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தெரிவு செய்வதற்கான போட்டி இந்தியா முழுவதும் 13 நகரங்களில் நடந்துள்ளது.
இந்நிலையில், மும்பையில் உள்ள யஷ்ராஜ் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் பல்வேறு பிரிவுகளில் இறுதிப் போட்டிகள் நடந்ததில், 5 பேர் ‘டாப்–5’ அழகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 5 பேரில், நடுவர்கள் வாக்களித்து முதல் 3 இடங்களைப் பெற்ற அழகிகளை தெரிவு செய்துள்ளனர்.
முடிவில் டெல்லி பெண் அதிதி ஆர்யா முதலிடத்தை பிடித்து இந்திய அழகியாக தெரிவு செய்யப்பட்டதோடு, ஆப்ரிக் ரச்சேல் வாஸ், வர்டிகா சிங், ஆகியோர் 2–வது மற்றும் 3–வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
நடுவர்களாக நடிகர்கள் ஜான் ஆபிரகாம், அனில்கபூர், நடிகைகள் மனிஷா கொய்ராலா, ஷில்பா ஷெட்டி, சோனாலி பிந்த்ரே, அபு ஜானி, சந்தீப்கோஸ்லா, ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அழகி பட்டம் வென்ற அதிதி ஆர்யா உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார் என்பதோடு, அவர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சி பகுப்பாளராக பணி புரிந்து கொண்டே அழகிப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
