மாணவர்களின் குடிநீரில் நஞ்சுகலந்த கொடிய செயலுக்கு பொறுப்பானவர்களை தவிர்த்து இன்னொருவர் மீது பழிசுமத்தும் பிண்ணனி என்ன?....
ஏழாலை சிறிமுருகன் பாடசாலை குடிநீரில் நஞ்சுகலந்த கொடிய செயலுக்கு
பொறுப்பானவர்களை தவிர்த்து இன்னொருவர் மீது பழிசுமத்தும் பின்னணி என்ன என்று கேள்வி எழுப்பி ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதிசீவரத்தினம் அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தஅறிக்கையில்,..
இச்சம்பவம் குறித்து ஏற்கனவே இருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், அப்பாடசாலையில் கல்விபயிலும் ஒர் மாணவியின் தந்தையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எனதுதம்பி என்றும்,
அதை எமது கட்சியோடு சம்பந்தப்படுத்தியும் ஆதாரமற்ற ஒர் செய்தியை இணையத்தளங்கள் ஊடாகவும் பரப்பும் செயலானது பெரும் அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் மயிலங்காட்டு மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை தீர்வுக்காகவும், அபிவிருத்திக்காகவும், வறியமக்களின் சமூக பொருளாதார மீட்சிக்காகவும் அர்ப்பணிப்போடு உழைக்கும் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் மூத்தஉறுப்பினர் என்றவகையிலும் இவ்விடயம் குறித்து பதில் கூற விரும்புகிறேன்.
எனக்கு ஓர் தம்பி மயிலங்காட்டிலோ அன்றிவே றேங்குமோ இல்லை என்பதுநான் என்றுமே ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கும் மயிங்காட்டுமக்கள் உட்பட சகலரும் நன்கறிந்தவிடயம்.