மக்களுக்கு வாக்குறுதி அளித்தப்படி ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு எதிராக மக்களுடன் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தப்போவதாக "மஹிந்த பிரதமர் முன்னணி" தீர்மானித்துள்ளதாக பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
ம.ஐ.முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவிதுறு ஹெல உறுமய ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் "மஹிந்த பிரதமர் முன்னணி" என்ற அமைப்பை அமைத்துள்ளதாகவும் அதன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆழமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கம்பன்பில தெரிவித்தார்.
ஏப்ரல் 23 ஆம் திகதி அரசாங்கத்தை கலைக்காவிட்டால் மக்களை திரட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், வீதி போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலங்களில் "மஹிந்த பிரதமர் முன்னணி" நுகேகொடை, கண்டி, இரத்தினபுரி ஆகிய நகரங்களில் நடத்திய கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.