இலங்கை குறித்த அறிக்கை செப்டம்பர் மாதம் வெளியிடப்பட வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட வேண்டியது அவசியமானது என வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் ஹியூகோ ஸ்வார் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதனை பிரித்தானியா விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். மேலதிக காலம் இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு கிரமமான முறையில் விசாரணைகளை நடாத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பகமான சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பதன் மூலம் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
