February 25, 2015

உள்நாட்டு விசாரணை குறித்து இன்னமும் முடிவில்லை - இலங்கை நீதி அமைச்சர்


இலங்கையின் போர் குறித்த உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்கான முடிவை இன்னமும் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என்று இலங்கையின் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதிகாரபூர்வ விஜயமாக லண்டன் வந்த அவர், பிபிசி சந்தேசியவின் சரோஜ் பத்திரனவுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.