வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் வீட்டிற்கு வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் தீவகத்திற்குள் நுழைந்தால் குடும்பத்தோடு அழிப்போம் என அச்சுறுத்தி விட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கருத்துத் தெரிவிக்கையில், நேற்றைய தினம் இரவு எனது வீட்டின் மீது சரமாரியாக கல்வீச்சு நடத்தப்பட்டது. இதன்போது வீசப்பட்ட கற்கள் வீட்டு கூரையின் மீதும்,
கதவுகள் ஜன்னல்கள் மீதும் வீழ்ந்தன.
பின்னர் சில நபர்கள் வீட்டின் கதவினை காலால் உதைத்தார்கள். பின்னர் என்னுடைய பெயரை கூறி வெளியே வா என கடும்தொனியில் கத்தினார்கள்.
பின்னர் அவர்கள் சென்றுவிட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் நான் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்திருக்கிறேன் என்றார்.