பாவக்குளம் அருகில் நேற்று இரவு குறித்த துப்பாக்கிசூடு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் 36 வயதுடைய பிரியந்த பிரேமரத்தின எனப்படுவராகும். நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் அதிகாரி இவ்வாறு துப்பாக்கிசூட்டில் காயமடைந்துள்ளார்.
புதிய அரசிற்கு தலையிடி கொடுக்கும் வகையிலான கோத்தா படைப்பிரிவின் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியில் இலங்கை காவல்துறை மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் கோத்தாவின் படை வேலையை காட்டத்தொடங்கியுள்ளது என்பதை காட்டுகின்றது.
வடக்கு முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் விசுவாசப்படைகள் தயாராகிவருவதாக கூறப்படுகின்ற நிலையினில் இத்துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது.
No comments:
Post a Comment