முன்னணி சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு குடியுரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு குடியுரிமை வழங்குமாறு கோரி குமார் குணரட்னம் சமர்ப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க இதனை உறுதி செய்துள்ளார்.
சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இன்றைய தினம் குறித்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். குமார் குணரட்னத்தை கைது செய்ய அல்லது நாடு கடத்த தடை விதிக்குமாறு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
