முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக வேண்டுமாயின் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டுமானால், அதற்கு நுகேகொடவில் கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் உரையாடினால், அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்

No comments:
Post a Comment