இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான சர்வதேச விசாரணைச் செயற்பாடுகளுக்கு தற்போது அவசியமில்லை எனவும் அமைச்சு பதவுக்காக காட்சி மற்றும் கட்சிகள் மாறி முஸ்லிம் சமூகத்தை விற்று பிழைப்பு நடத்தும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க மாற்றத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது. உள்ளக செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் சர்வதேச விசாரணைப் பொறி முறையினை விடவும் சுயாதீன உள்ளக விசாரணைகளுக்கு முக்கியத்துவமளிப்பது நாட்டின் இறையாண்மைக்கும் வென்றெடுத்துள்ள ஜனநாயகத்துக்கும் பலமானதாக அமையும். அத்தோடு வென்றெடுத்துள்ள சமாதானத்தையும் நல்லாட்சியினையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். கிழக்கில் முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க மைத்திரி உறுதி அளித்திருப்பதால் தனது விசுவாசத்தை ரவூப் ஹக்கீம் வெளிப்படுத்துகிறார்.