எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற தர்ம உபதேச நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது மக்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடும் எதிர்ப்பாப்போ அல்லது அவசியமோ எனக்கு கிடையாது.
எனது வெற்றியின் போதும் தோல்வியின் போதும் எனக்கு நெருக்கமாக செயற்பட்ட சில கட்சிகள் இருக்கின்றன.
அந்தக் கட்சிகளையும் ஆதரவாளர்களையும் நிர்க்கதியாக்கும் எண்ணம் எனக்குக் கிடையாது.
அவர்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் அவர்களுக்காக நான் மக்கள் முன்னிலையில் வந்து குரல் கொடுப்பேன்.
பொதுத் தேர்தலில் போட்டியிட நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.