நாட்டில் அடிப்படைவாதத்தை ஊக்குவித்து விதம் விதமாக தாடியும், சீருடையாக புதிய கலாச்சாரத்தை ஊக்குவித்து தமது ‘சகோதர’ முஸ்லிம் சமூகத்துக்கும் பிரச்சினையாக இருக்கும் அடிப்படை வாதிகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடரும் தேவையிருப்பதாகவும் இதை அறியாதவர்களாக எதிர்கால சந்ததியினரை சவுதி பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி இலங்கைக்கு அடிப்படைவாதம் இறக்குமதி செய்யப்படுவதாகவும் தனது பழைய பல்லவியையே ஓதும் பயங்கரவாதி ஞானசார, ஒரு மாத காலத்திற்குள் குருகலயில் அமைந்திருக்கும் (ஜெய்லானி) கட்டிடங்கள் அகற்றப்படுவதற்கான தமது போராட்டத்தை மீள ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தையும் பேரினவாதத்தையும் ஊக்குவித்து நாட்டைத் துண்டாடிய ஞானசாரவின் கொட்டத்தை அடக்குவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் பகிரங்கமாக கடந்த காலத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் இறங்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் வேளையில் கூடவே ஞானசாரவும் பேரினவாதத்தோடு களமிறங்கத் தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment