![]() |
| Lion |
பொது பல சேனாவினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதில் தொடர்ந்து அவர் கருத்து தெரிவித்ததாவது;
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்து நேற்று (நேற்று முன்தினம்) நுகேகொடையில் இடம்பெற்ற மக்கள் பொதுக்கூட்டத்தில் இனவாத செயற்பாடுகளோ அல்லது இனவாத கருத்துகளோ எதுவுமே பரப்பப்படவில்லை. ஆனால் அஸாத் சாலி ஆரம்பத்தில் சவால் விடுத்தது மட்டுமன்றி இனவாதிகளாக சிங்கள மக்களை சித்திரித்திருப்பதும் கண்டிக்கத்தக்க விடயமே. எம்மை இனவாதிகள் என தெரிவிக்கும் இவர்கள் தாங்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது தொடர்பிலும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முஸ்லிம் மக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காக இத் தலைவர்கள் இனவாதக் கருத்துக்களை மட்டுமே பரப்புகின்றனர். முஸ்லிம் சமூகத்தினை உண்மையாக நேசிக்கும் அமைதியை விரும்பும் முஸ்லிம் அரசியல் தலைவர்களோ உண்மையான முஸ்லிம் அமைப்புக்கள் இங்கு இருக்குமானால் அஸாத் சாலி போன்றோரை உடனடியாக அரசியலில் இருந்து வெளியேற்றி ஓரங்கட்டி விட வேண்டும்.
சிங்களவர்கள் யார் என்பது தெரியாது இவர்கள் எம்முடன் மோதிப் பார்க்கின்றனர். நாம் சிங்கங்களைப் போன்றவர்கள். நாம் அமைதியாக இருப்பதனால் எம்மை வேட்டையாட முயற்சிக்கின்றனர். ஆனால் எமக்கு கோபம் வருமாயின் அதன் பின்னர் நிலைமைகள் மிக மோசமானதாக அமைந்து விடும் என்பதை முஸ்லிம் பிரிவினைவாதத் தலைமைகள் தெளிவாக விளக்கிக்கொள்ள வேண்டும்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்குகளை கொடுத்து அவரை ஜனாதிபதியாக்கி விட்டதால் முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகளை நாட்டில் முன்னெடுக்கலாம் என எவரேனும் நினைத்தால் அதற்கு ஒரு போதும் சந்தர்ப்பம் கிடைக்காது. யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த கொள்கை அழியாது. அழிக்க விடவும் மாட்டோம். பள்ளிவாசல்களில் இனவாதத்தைப் பரப்பி முஸ்லிம் சமூகத்தினை நாட்டில் வேறொரு தனித்த சமூகமாக மாற்றுவதன் காரணத்தினாலேயே அன்று முஸ்லிம் இனவாதம் என்ற ஒன்று நாட்டில் உருவாகியுள்ளது. இது மிகப்பெரிய பாதிப்பினையே நாட்டில் ஏற்படுத்தி விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
