February 28, 2015

ஈரான் – வல்லரசுகள் பேச்சுவார்த்தை…!!

ஈரானுக்கும், ஆறு உலக நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ளது.

சுவிட்சலாந்தில் இந்த போட்டி நடைபெறும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஈரானின் அணுவிருத்தி திட்டத்துக்கு உலக நாடுகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் அது தொடர்பான உடன்படிக்கையை ஏற்படுத்துக் கொள்ளும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது.

இதன்படி அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஷ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுடன் ஈரானின் சிரேஷ்ட்ட அதிகாரிகள் திங்கட் கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment