February 05, 2015

கிழக்கு முதலமைச்சராக ஹாபீஸ் நசீர் அஹமட்?


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கைக்கு அமைய இறுதி இரண்டரை வருடங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில்  குறித்த நியமனம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment