போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வெலே சுதா இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
அவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
எனினும் அவர் சிறையில் இருந்து வெளியில் அழைத்து வரப்பட்டால், கொலை செய்யப்படலாம் என்று குற்றப் புலனாய்வு துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எனினும் அவரை அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment