February 10, 2015

சுன்னாகம் மின்சார நிலையம் தொடர்பான பிரேரணை வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிப்பு

சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து கழிவு ஒயில் நிலத்தடி நீரில் கலந்துள்ளமை தொடர்பிலான பிரேரணை வடக்கு அவையின்  அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒயில்  கசிவு தொடர்பிலான பிரச்சினை குறித்த பிரேரணை இன்று வடக்கு மாகாண சுற்றுச்சூழல்  அமைச்சர் பொ. ஐங்கரநேசன்  சபையில் முன்வைத்து உரையாற்றினார். 

அதனனத்  தொடர்ந்து தற்போது விவாதம் நடைபெற்று வருகின்றது. அதன்போது உறுப்பினர்கள்  எதிர்காலத்தில்  எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்  மற்றும்  விரைவான தீர்மானங்கள் , மாற்று திட்டங்கள் என்பன தொடர்பிலும் உரையாற்றி வருகின்றனர்.