சீனாவின், நானிங் நகரில் மனித முகத்தின் தோற்றத்தையொத்த விகாரமடைந்த முகத்துடன் கூடிய பன்றிக் குட்டியொன்று பிறந்துள்ளது.
எனினும் பிறந்து சில நாட்களுக்கு பின்னர் இப் பன்றிக்குட்டி உயிரிழந்துள்ளது. குட்டியின் தாய் அதற்கு பாலூட்ட மறுத்து ஒதுக்கியமையே இதற்கான காரணம் என இப்பன்றிக் குட்டி பிறந்த பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படங்கள் தற்போது இணையத்தில் வலம் வருவதுடன் பன்றிக் குட்டியை விலைக்கு வாங்க பலர் போட்டி போட்டு வந்ததாக பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.