ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் முகாங்களுக்குள் முடங்கியிருந்த இராணுவத்தினர் மெல்ல மெல்ல தமது முன்னைய காலத்தில் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையை மீள ஆரம்பித்துள்ளனர்.
வீதி ரோந்துகள் மற்றும் கிராமங்களை கண்காணிக்கும் ரோந்துகள் என்பன மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையை அச்சுறுத்தும் பாணியிலான இந்த ரோந்து நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக குறைந்திருந்தது.
இதேவேளை பொது இடங்களிலும் இராணுவத்தினர் திடீர் பிரசன்னம் கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
புகையிரத நிலையங்கள், பேருந்து தரிப்பிடங்கள், ஆலயங்கள், மற்றும் மக்கள் குளிக்கும் குளங்கள் முதலியவற்றிலும் இராணுவத்தினர் மேற்கொள்ளும் காண்காணிப்பு நடவடிக்கைகள் மக்களின் இயல்பு வாழ்வை பாதித்துள்ளன.
தேர்தல் முடிவுகளுடன் இராணுவமுகாங்களுக்குள் முடங்கிய இராணுவத்தினர் மீண்டும் இவ்வாறு தமது நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக குறிப்பிடும் எமது செய்தியாளர் ஒருவர் இவைகள் மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்கும் என்றும் கூறுகிறார்.