வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் சோதனை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றையதினம் முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருட்களை வழங்கி விட்டு ரவிகரன் வீடு திரும்பிய நிலையிலேயே இச் சோதனை இடம்பெற்றுள்ளது . இராணுவத் தளபாடங்கள் வைத்திருந்தாக கூறியே கடற்படையினரால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சோதனை மேற்கொண்ட போது ரவிகரன் தன்னை அடையாளப்படுத்தியபோது,"அது எமக்கு நன்றாகத் தெரியும்" என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதே வேளை சோதனை முடிந்த பின், ரவிகரனும் இப்போலியான சோதனை குறித்து தன் கண்டனத்தையும் நேரடியாக தெரிவித்துள்ளார்.
ரவிகரனிடம் இது குறித்து தொடர்பு கொண்டு கேட்டபோது, வடக்கில் ராணுவ அடக்குமுறை அதிகரித்துள்ளதை இச்சம்பவம் காட்டுகிறது. பாடசாலை உபகரணங்களை இராணுவ தளபாடங்கள் என அடையாளப்படுத்தி சோதனை செய்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட என்னிடமே இவ்வாறான அத்துமீறல் சர்வ சாதாரணமாக மேற்கொள்ளப்படுகிற நிலையில் சாதாரண மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். இது போன்ற அத்து மீறல்களுக்கெல்லாம் நாம் அஞ்சப்போவதில்லை .
அடிபணியப் போவதுமில்லை. எத்தனை தடைகள் வரினும் தொடர்ந்தும் எம் மக்களுக்கான உரிமைக்குரல் வலிமையாக ஒலிக்கும். என்றார்.
No comments:
Post a Comment