பிரித்தானியாவில் பெண்ணெருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இலங்கை பிரஜையொருவருக்கு ஐந்தரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
35 வயதான குறித்த இலங்கை பிரஜை ஸ்டேசன் ரோட், போட்ஸ்லேட் என்ற இடத்தில் வசித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இரவு கேளிக்கை விருந்தகம் ஒன்றில் குறித்த பெண்ணை அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
அதிக மது அருந்தியமையால் குறித்த பெண் சுயநினைவு இழந்த நிலையிலேயே இலங்கையரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உதவியுடனேயே குற்றம்புரிந்த இலங்கைர் கைது செய்யப்பட்டதாக பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

No comments:
Post a Comment