January 20, 2015

கோத்தாவின் ஆயுதக்களஞ்சியம் திறப்பு ஆயுதங்கள் மீட்பு

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ´ரத்னா லங்கா´ என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயுத களஞ்சியம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த களஞ்சிய அறையில் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகவும் அனுமதி இன்றி ஆயுதம் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த களஞ்சிய அறையில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment