January 17, 2015

ஜல்லிக்கட்டு ரத்து: களையிழந்த அலங்காநல்லூர் - வீடுகளில் கருப்புக்கொடி… கடையடைப்பு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என சில அமைப்பினர் அறிவித்துள்ளதால் வாடிவாசலை பூட்டி போலீசார் சீல்வைத்துள்ளனர். பொங்கல் பண்டியை முன்னிட்டு மதுரையில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இதனைக் காண உள்ளூர் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவதுண்டு.


No comments:

Post a Comment