January 02, 2015

இராணுவம் சுட்டதில் இளைஞன் படுகாயம்

யாழ் 
நாவாந்துறையில் இலங்கை இராணுவம் இன்றிரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். நாவாந்துறையினில் உள்ளுர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடையேயான தொடர் மோதலை கட்டுப்படுத்தவென கூறி படையினர் துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர்.

இத்துப்பாக்கி சூட்டினில் அதே இடத்தை சேர்ந்தவரான சந்திரகுமார் சண்சிவன்(வயது 30) என்பவரே காயமடைந்துள்ளார்.

வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த இவர் துப்பாக்கி சூட்டினில் காயமடைந்த போதும எந்தவொரு மோதல் சம்பவத்துடனும் தொடர்பு அற்றவரென கூறப்படுகின்றது.

இந்நிலையில் காயமடைந்த நிலையினில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட அவரை வழிமறித்து படையினர் மீண்டும் தாக்கியதாகவும் அத்துடன் அவரை வைத்தியசாலைக்கு எடுத்து வந்திருந்தவர்களையும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இளைஞனை கைது செய்த படையினர் மேலதிக விசாரணைக்கென அழைத்து சென்று பின்னர் விடுவித்திருந்ததாக தெரியவருகின்றது. இப்படியான பயமுறுத்தலை மேற்கொண்டு தமிழர்களை கட்டுப்படுத்தி வைக்க இராணுவம்  முயல்கிறது. அதாவது மகிந்த தோற்கலாம் என்ற நிலையில் வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை பலப்படுத்தி ஒரு குழப்ப நிலையை உருவாக்கி மீண்டும் மகிந்தவின் ஆட்சியை நீடிக்க ஏற்படுத்தும் ஒரு திட்டம் கோத்தாவின் கையில் இருப்பதுடன் அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment