பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்காக நாளை யாழ்ப்பாணத்துக்கு வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாளைக் காலை பலாலி விமான நிலையத்தை வந்தடையும் ஜனாதிபதி அங்கிருந்து காங்கேசன்துறைக்கு செல்வார். காங்கேசன்துறை ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முதலாவது பயணியாக அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரை வந்தடைவார்.#
அதன் பின்னர் காலை 9.30 மணியளவில் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து துரையப்பா பொது விளையாட்டரங்கில் இடம்பெறும் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்பார்.
பின்னர் மன்னார், வவுனியாவில் நடக்கும் பரப்புரைக் கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
