இலங்கை அரசாங்கத்தின் கல்வித்துறை துணை அமைச்சரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பிலான பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பொது வேட்பாளராக தேர்தல் களத்தில் குதித்ததை அடுத்து ஆளும்கட்சிக்கும், எதிக்கட்சிக்கும் இடையே பலர் கட்சிமாறினார்கள்.
இதன் தொடர்ச்சியாக கல்வித்துறை துணை அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க இப்போது எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.
அதேவேளை மைத்திரிபால சிறிசேனவின் மாவட்டமான பொலன்நறுவை மாவட்டத்தின் 17 ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
