January 08, 2015

தபால் மூல வாக்குகள்-கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மைத்திரி முன்னிலையில்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் தபால் மூல  வாக்குகள் என்னும் பணி ஆரம்பமாகியுள்ள நிலையில் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன்  தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.

எமது செய்தி சேவைக்கு இது தொடர்பான செய்திகள் கிடைத்துள்ள போதிலும் உத்தியோக பூர்வமாக செய்திகள் தேர்தல் முடிவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ முடிவு வரும் வரை நாம் அடக்கி வாசிக்க தீர்மாணித்துள்ளோம்.