கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சத்தியப்பிரமாணம், உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ள நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment