ஈழகொள்கையாளர்களுக்கு தலைத்தூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படும் என்று சொல்லப்பட்டுகின்றது.
அது தவறான ஒரு பரப்புரையாகும்.
மைத்தரியில் நிர்வாகத்தில் இவ்வாறு ஒன்றும் மேற்கொள்ளப்படமாட்டாது.
நாடு பிளவுப்படுத்த ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது. அத்துடன் ஜனவரி 9ஆம் திகதி தேசிய பாதுகாப்பு சபை ஒன்று அமைக்கப்படும்.
அதற்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பென்சேகா தலைமை வகிப்பார் என்றும் பொது வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment