January 02, 2015

நான் கதைத்ததால் தான் அனந்திக்கு இவ்வாறு ஏற்பட்டதென்றால் நான் அதற்கு மனம் வருந்துகின்றேன் - மாவை

இன்று காலை அனந்தி சசிதரனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அனந்தியை கடுமையாகத் திட்டிதாகவும் அதனால் அனந்தி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்ததாக தெரியவந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவை சேனாதிராஜா  தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவர்  கூறுகையில்,

நான் தொலைபேசி அழைப்பெடுத்து அனந்தியிடம் பேசியது உண்மைதான். ஆனால் ஊடக செய்திகள் சொல்லும்படி நான் அவரை திட்டவில்லை. நாட்டு நிலை குறித்தே பேசியிருந்தேன். என்னை பற்றி பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நான் ஒரு வயது முதிர்ந்த அரசியல்வாதி ஒருபோதும் அப்படி பேசுபவர்கள் அல்ல. நான் கதைத்ததால் தான் அனந்திக்கு இவ்வாறு ஏற்பட்டதென்றால் நான் அதற்கு மனம் வருந்துகின்றேன்´ என்றார். 

No comments:

Post a Comment