விக்ரம் கடைசியாக ஒரு மாஸ் ஹிட் கொடுத்த படம் அந்நியன். இதன் பிறகு இவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வி அல்லது சுமாராகவே ஓடியது.
இந்நிலையில் மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் ஐ. இப்படம் முதன் நாளே ரூ 30 கோடி வரை வசூல் செய்தது.
அந்த வகையில் இப்படம் வெளிவந்து 4 நாட்கள் ஆன நிலையில் கண்டிப்பாக ரூ 100 கோடி வசூல் செய்திருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி உண்மையென்றால் ரஜினி, விஜயை விட விக்ரம் தான் தற்போது கோலிவுட்டில் நம்பர் 1.
